இந்தியா

ஹைதராபாத் வெள்ளம்: நேரில் பார்வையிட்ட ஒவைசி

14th Oct 2020 04:24 PM

ADVERTISEMENT

ஹைதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி நேரில் சென்று பாவையிட்டார்.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் ஹைதராபாத்தில் பெய்த கனமழையில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹைதாராபாத் தொகுதி மக்களவை உறுப்பினரும், அகில இந்திய  மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி நேரில் சென்று பார்வையிட்டார்.

சுவர் இடிந்து விபத்துக்குள்ளான பந்தலகுடா பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடச் சென்றபோது வழியில் தவித்து நின்ற மக்களை தமது வாகனத்தின் உதவியுடன் உரிய இடத்தில் கொண்டு சேர்த்தார்.

ADVERTISEMENT

தொடர் மழைபெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும், தம்மைத் தொடர்புகொள்ளும் வகையில் அவசர உதவி எண்ணையும் வழங்கி எப்போது வேண்டுமானாலும் உதவிகோரலாம் என்று தெரிவித்தார்.

Tags : Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT