இந்தியா

ஹிமாசல் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சருக்கு கரோனா

14th Oct 2020 11:21 AM

ADVERTISEMENT

 

ஹிமாசல பிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராம் லால் மார்க்கண்டாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உள்பட ஐந்து அமைச்சர்கள் மற்றும் 68 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் 12-வது எம்.எல்.ஏ.வுக்கும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சமூகத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,

ADVERTISEMENT

கரோனா தொற்றுள்ளவரின் தொடர்புகொண்ட பின்னர், கரோனாவுக்கான சில அறிகுறிகள் என்னிடம் தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை மேற்கொள்கையில் கரோனா இருப்பது உறுதியானது. 

மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், எனது வீட்டிலேயே தனிமைப்படுத்துதலில் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

முன்னதாக, திங்களன்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கும் தொற்று சாதகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மின்சக்தி அமைச்சர் சுக்ரம் சௌத்ரி மற்றும் ஜல் சக்தி அமைச்சர் மகேந்தர் சிங் தாக்கூர் ஆகியோரும் கரோனா பாதித்து, சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது இருவரும் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT