இந்தியா

ஹாத்ரஸ் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

14th Oct 2020 06:51 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த வழக்கில் அவரது குடும்பத்தாருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரமாண பத்திரத்தை உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டபெண்ணின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர், பாட்டி ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாநில அரசு பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஒரு ஆய்வாளர், ஒரு தலைமை காவலர், நான்கு காவலர்கள், இரண்டு பெண் காவலர்கள், ஒரு உதவி ஆய்வாளர் என மொத்தம் 51 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வீட்டின் நுழைவாயிலில் பார்வையாளர்களின் பதிவேடு காவல்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

19 வயதான தலித் பெண் செப்டம்பர் 14 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags : Hathras
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT