இந்தியா

சஞ்சல்குடா சிறையில் முன்னாள் வட்டாட்சியர் தூக்கிட்டுத் தற்கொலை

14th Oct 2020 12:52 PM

ADVERTISEMENT

 

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்தியச் சிறையில் முன்னாள் வட்டாட்சியர் இ.நாகராஜு புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

முன்னாள் கீசரா தாசில்தார் நாகராஜு, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உதவி செய்ததற்காகவும், ஊழல் தடுப்பு பிரிவில் ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். 

சஞ்சல்குடா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மத்தியச் சிறையில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ADVERTISEMENT

இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT