இந்தியா

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 36 பேர் பலி

14th Oct 2020 01:21 PM

ADVERTISEMENT

 

ஹனோய்: வியட்நாமில் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் சிக்சி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை என்று இயற்கை பேரிடர் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி 1,35,700-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, 585 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதற்கிடையில், 870 ஹெக்டேர் நெல் வயல்களும், 5,300 ஹெக்டேருக்கு மேற்பட்ட பிற பயிர் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் மற்றும் விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT