இந்தியா

பிகார் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்

14th Oct 2020 06:04 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (புதன்கிழமை) பேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னாள் எம்எல்ஏ சதீஷ் யாதவை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார். 

இதுபற்றி தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது:

"ரகோபூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். தொகுதி மக்கள் எங்களை வாழ்த்தினர். அவர்கள் எங்களைத் தேர்வு செய்வார்கள். பிகார் மக்கள் லாலு (லாலு பிரசாத்) இல்லாமல் தவித்து வருகின்றனர். அடுத்த 2 நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன்.

ADVERTISEMENT

எங்களது வாக்குறுதிகளை நாங்கள் பூர்த்தி செய்வோம். நாங்கள் ஆட்சியமைப்போம். பிகார் மக்கள் எங்களைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்."

சதீஷ் யாதவ் தொடர்ந்து 3-வது முறையாக ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2010 பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியை (தேஜஸ்வியின் தாய்) வீழ்த்தினார். எனினும், 2015-இல் சதீஷ் யாதவைத் தோற்கடித்தார் தேஜஸ்வி யாதவ்.

பிகார் பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Tags : Tejashwi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT