இந்தியா

பிகார் தேர்தல்: சுசாந்த் சிங் ராஜ்புத் உறவினருக்கு பாஜக வாய்ப்பு

14th Oct 2020 06:50 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலுக்கான அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

சடாபூர் தொகுதியின் எம்எல்ஏவும், மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் நெருங்கிய உறவினருமான நீரஜ் குமாருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

சுசாந்த் சிங் ராஜ்புத் மறைவின் தாக்கம் மக்கள் மனதில் இன்னும் நிலவி வரும் நிலையில், நீரஜ் குமாருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு எதிர்பார்க்கப்பட்டது.

3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 29 பேரும், 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 46 பேரும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 35 பேர் அடங்கிய 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக முறையே 122 மற்றும் 121 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பாஜக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT