இந்தியா

தெலங்கானா, ஆந்திர மாநிலங்களுக்கு உதவி: அமித் ஷா ட்வீட்

14th Oct 2020 10:52 PM

ADVERTISEMENT


கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். 

தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கேட்டறிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுபற்றி சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

"கனமழையால் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது." 

ADVERTISEMENT

Tags : Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT