இந்தியா

உ.பி.யில் மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய வழக்கு: ஒருவர் கைது

14th Oct 2020 06:19 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பக்சா கிராமத்தில் குஷ்பு(17), கோமள்(7) மற்றும் முஸ்கான்(5) ஆகிய சகோதரிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மா்ம நபா் வீட்டு கூரையின் மேல்புறத்தில் இருந்து அமிலத்தை வீசி விட்டுச் சென்றனா். இதில் மூன்று பெண்களும் காயமடைந்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் இந்தக் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையதாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை ஹுசூர்பூர் பகுதியில் ஆஷிஷ் சோட்டு என்பவரைக் கைது செய்ய சென்ற காவல்துறையினரிடமிருந்து அவர் தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமுற்ற ஆஷிஷ் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்படவர்களுக்கு உடனடி நிதி உதவி அளித்து முறையான சிகிச்சையை உறுதி செய்யுமாறு கோண்டா காவல்துறை கண்காணிப்பாளருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : uttarpradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT