இந்தியா

ஏன் இத்தகைய இடங்களில் மட்டும் சாகிறார்கள்? ஹாத்ரஸ் இளம்பெண் குறித்து அதிர வைத்த பாஜக தலைவர்

7th Oct 2020 12:02 PM

ADVERTISEMENT

 

பாரபங்கி: இந்த மாதிரி பெண்கள் எல்லாம் ஏன் இத்தகைய இடங்களில் மட்டும் சாகிறார்கள்? என்று ஹாத்ரஸ் இளம்பெண் குறித்து பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் ஏன் இத்தகைய இடங்களில் மட்டும் சாகிறார்கள்? என்று ஹாத்ரஸ் இளம்பெண் குறித்து பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவா. இவர் மீது 44 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன, இவர் செவ்வாயன்று செய்தித் தொலைக்காட்சி ஓன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் ஹாத்ரஸ் சம்பவத்தில் மரணமடைந்த இளம்பெண் குறித்து கூறியுள்ளதாவது:

சம்பவம் நடந்த நாளன்று அந்தப் பெண்தான் அந்த பையனை குறிப்பிட்ட தினை வயலுக்கு அழைத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இருவருக்கும் முன்பே உறவு இருந்திருக்க வேண்டும். இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் செய்தித் தொலைகாட்சிகளிலும் வெளிவந்துள்ளது. அதன்பிறகுதான் அந்தப்பெண் பிடிபட்டிருக்க வேண்டும்.

இந்த மாதிரி பெண்கள் எல்லாம் ஏன் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார்கள்? அவர்கள் பொதுவாக கரும்பு, சோளம் மற்றும் தினை வயல்கள் அல்லது புதர்கள், காடுகளில்தான் கண்டெடுக்கப்படுவார்கள். ஏன் அவர்கள் ஒரு போதும் அரிசி அல்லது கோதுமை வயல்களில் பிணமாக கண்டெடுக்கப்படுவதில்லை? ஏன் என்றால் கரும்பு மற்றும் சோள வயல்களில் ஒரு ஆள் மறைந்து கொள்ளும் அளவிற்கு இடம் உள்ளது. ஆனால் அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மூன்று அல்லது நான்கு அடிகள்தான் வளரும்.

இந்த மாதிரி சம்பவங்கள் நடந்ததற்கோ அல்லது குற்ற சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிணம் இழுத்துச் செல்லப்பட்டதற்கோ சாட்சிகள் எதுவும் இல்லை.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அப்பாவிகள் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். அவர்கள் சரியான நேரத்தில் விடுதலை செய்யப்படவில்லை என்றால், அவர்கள் மனரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள். அவர்களது இளமையை யார் திருப்பித் தருவார்கள்? அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT