இந்தியா

ரஷிய அதிபர் புதினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி

7th Oct 2020 04:47 PM

ADVERTISEMENT

புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

விளாதிமிர் புதினுடனான தமது நீண்ட கால நட்பை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்துவரும் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

கொவிட்-19 காரணமாக இரு நாடுகளும் சந்தித்து வரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும் நாள்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்புநிலை திரும்பியவுடன் அதிபர் விளாதிமிர் புதினை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
 

Tags : pm modi narendra modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT