இந்தியா

ஒடிசா: அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக இணைய சேவை

7th Oct 2020 04:06 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவையை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தலைமையில் கிராம மேம்பாட்டுக் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்ட பாரத் நெட் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணைப்பு வழங்கவும் தலைமைச் செயலாளர் திரிபாதி உத்தரவிட்டார்

இணைய வசதி மூலம் டிஜிட்டல் சேவைகளை துரிதப்படுத்துவதால் மாநில வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், இணைய சேவையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வங்கிகளில் இலவச வைபை (wifi) வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். 

ADVERTISEMENT


கிராமங்களுக்கு இணைய சேவையை வழங்கும் விதமாக ஏற்கனவே 22, 541 கிலோமீட்டர் தூரம் வரை ஆப்டிகல் பைபர் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள்கள் அமைத்து 27,610 கிலோமீட்டருக்கு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் அமைக்கும் இலக்கு எட்டப்படும் என்று மின்னணுத்துறை செயலாளர் மனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் உள்ள 230 மண்டங்களை சேர்ந்த 4651 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

Tags : Odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT