இந்தியா

கர்நாடகம்: நாளொன்றுக்கு 1.5 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இலக்கு

7th Oct 2020 03:30 PM

ADVERTISEMENT

 

கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 1.4 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாக அந்த மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் டிவிட்டரில் தெரிவித்ததாவது, 

கர்நாடகத்தில் ஒரேநாளில் 1,04,348 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 146 ஆய்வகங்களில் 55,690 ஆர்டி-பிசிஆர் மற்றும் பிற முறை சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், 30 மாவட்டங்களில் விரைவு ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்பட்டன. 

ADVERTISEMENT

ஆனால், விரைவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் கரோனா பரிசோதனை நடத்தப்படுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6-ம் தேதி மாலை வரை, ஒட்டுமொத்தமாக 6.57 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9,461 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். அதேசமயம், 5.33 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

கரோனா உச்சபட்ச பாதிப்பில் பெங்களூரு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2.57 லட்சம் பேரும், அதைத்தொடர்ந்து மைசூரு 38,611 மற்றும் பல்லாரி 33,257 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT