இந்தியா

முகக்கவசம்: அபராதத்தைக் குறைத்தது கர்நாடகம்

7th Oct 2020 04:56 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாததற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநில விதிமுறைகளின்படி, அந்தந்த மாநில அரசுகள் அபராதத் தொகை விதித்து வசூலித்து வருகின்றன. 

இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கர்நாடகத்தில்முகக்கவசம் அணியாததற்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகபட்சமாக ரூ. 1,000 உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், நகரப் பகுதிகளில் அபாரதத் தொகை ரூ. 1,000 என இருந்த நிலையில் இது தற்போது ரூ. 250 ஆகவும், அதேபோன்று ஊரகப் பகுதிகளில் ரூ. 500 இருந்த அபாரதத் தொகை ரூ. 100 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் வருமானமின்றி தவிப்பதால் பலர் அபராதத் தொகையை கட்ட முடியவில்லை என்பதால் குறைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

Tags : கர்நாடகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT