இந்தியா

'கரோனா கட்டுப்பாட்டில் ஜப்பான் உடனான கூட்டுழைப்பு பலனளித்தது'

7th Oct 2020 12:36 PM

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீளும் முயற்சியில் ஜப்பான் உடனான கூட்டுழைப்பு மிகப்பெரிய பலனை அளித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

‘குவாட்’ என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பைச் சோ்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஜெய்சங்கர் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து இன்று ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடேகியை (Toshimitsu Motegi) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் மொடோகிக்கு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், உற்பத்தி, திறன்கள், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தையில், ஐ.நா. சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய நிலைமை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பு, இந்தோ-பசிபிக் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செழிப்பை உணர உதவும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Tags : External Affairs Minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT