இந்தியா

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்வு

7th Oct 2020 11:11 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 986 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,04,555 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.55 சதவீதமாகும்.

புதிதாக 72,049 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கரோனா பாதிப்பு 67,57,132 ஆக அதிகரித்துவிட்டது. எனினும், இதுவரை 57,44,694 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85.02 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 9,07,883 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 13.44 சதவீதமாகும்.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 6-ஆம் தேதி வரை 8,22,71,654 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செவ்வாய்கிழமை மட்டும் 11,99,857 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 38,717 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,461 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,052 பேரும், தில்லியில் 5,581 பேரும் கரோனாவால் பலியாகினா்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT