இந்தியா

தந்தை மற்றும் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்ட 16 வயது கர்ப்பிணி

7th Oct 2020 11:21 AM

ADVERTISEMENT

 

ஷாஜஹன்பூர்: உத்தரபிரதேசத்தில் தந்தை மற்றும் சகோதரனால் 16 வயது கர்ப்பிணி பெண் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக ஷாஜஹன்பூர் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹன்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் முறைகேடாக கர்ப்பமடைந்துள்ளார். இதனால் ஊரார் அந்தப் பெண்ணின் தந்தையை கேலி செய்து பேசியுள்ளனர். இதன்காரணமாக ஆத்திரமடைந்த அவர், அந்தப் பெண்ணின் மூத்த சகோதரருடன் சேர்ந்து ரகசியமாக அந்தப் பெண்ணை அடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தலையைத் துண்டித்த அவர், உடலை ஊரில் உள்ள நதிக்கரையில் புதைத்துள்ளார்.  

ADVERTISEMENT

கடந்த மாதம் 23-ஆம் தேதியில் இருந்து அந்தப் பெண்ணைக் காணாத நிலையில் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் சம்பவம் குறித்து ரகசிய தகவல் கிடைத்த காவல்துறையினர் நடத்திய உடனடி விசாரணையில் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்து விட்டார். ஆனால் சகோதரரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்தக் கொலை சம்பவத்தில் அந்தப் பெண்ணின் தாயாருக்கும், மற்றொரு சகோதரருக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதேசமயம் அந்தப் பெண் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்காததால், சிறுமியுடன் உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கிய அந்த குற்றவாளி குறித்தும் காவல்துறையினர் தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT