இந்தியா

சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை

7th Oct 2020 10:33 PM

ADVERTISEMENT


சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாக சிம்லா காவல் துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.

அஸ்வானி குமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மற்றும் ஹிமாச்சலப் பிரதேச அரசுகளுக்காக பணியாற்றியுள்ளார். 1973-இல் ஐபிஎஸ்-இல் இணைந்த அவர் 2006 ஆகஸ்டில் ஹிமாச்சலப் பிரதேச காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அவர் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : suicide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT