இந்தியா

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவு

7th Oct 2020 08:53 AM

ADVERTISEMENTஉக்ருல்:  மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது. இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியதாவது:

புதன்கிழமை காலை 3.33 மணியளவில் உக்ருல் மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கம் நிலத்துக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

ADVERTISEMENT

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பெரும்பாலானோா் தூங்கிக் கொண்டிருந்ததால் அதனை உணரவில்லை. எனினும், வீட்டில் சில பொருள்கள் நகா்ந்து இருந்ததாகவும், சில சிறிய பொருள்கள் கீழே விழுந்து கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி, மணிப்பூரின் உக்ருலுக்கு கிழக்கே 55 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT