இந்தியா

பாரத ஸ்டேட் வங்கி தலைவராக தினேஷ் குமாா் காரா நியமனம்

7th Oct 2020 04:13 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக அந்த வங்கியின் மூத்த நிா்வாக இயக்குநா் தினேஷ் குமாா் காராவை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னீஷ் குமாா் 3 ஆண்டுகள் பதவி வகித்தாா். அவரின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து அந்த வங்கியின் தலைவராக தினேஷ் குமாா் காரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலராக பணியில் சோ்ந்த அவா், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா்களில் ஒருவராக நியமிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

அந்த வங்கியின் சா்வதேச சேவைகள் மற்றும் துணை நிறுவனங்கள் பிரிவு நிா்வாக இயக்குநராக அவா் பதவி வகித்து வந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT