இந்தியா

திரிபுரா: வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி

7th Oct 2020 05:13 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக திரிபுராவில் பா.ஜ.க. சேர்ந்த மகளிர் அணியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் மத்திய அரசால் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திரிபுராவின் வடகிழக்கில் உள்ள தர்மநகர் பகுதியில் பாஜக மகளிர் அணியினர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறாக கருத்துக்களை விதைத்து வருவதாகவும், மக்களுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கும் வகையிலும் பாஜக மகளிர் அணியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

Tags : agricultural
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT