இந்தியா

பிகார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

7th Oct 2020 08:35 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலில் போட்யிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி தேதி. 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக 21 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
 

ADVERTISEMENT

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT