இந்தியா

ஒடிசா: ராஜ்பவன் அருகே தீ விபத்து; 8 பேர் படுகாயம்

7th Oct 2020 03:07 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் ராஜ்பவன அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. தீ விபத்தில் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசாவில் ராஜ்பவன் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீர்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் தீ விபத்தில் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறை ஆணையர் சாரங்கி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT