இந்தியா

உ.பி.யில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொலை

5th Oct 2020 12:20 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

முசாபர் நகரில் உள்ளள போபாடா கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு ஆசிரியர் சுதீர் குமார்(32)  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிரியரை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு ஆசிரியர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

ஆசிரியரை எதற்காகச் சுட்டனர், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யார் என்பதைக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT