இந்தியா

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

5th Oct 2020 12:16 PM

ADVERTISEMENT

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோ்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 8.58 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.5 லட்சம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில், 1.6 லட்சம் போ் அட்வான்ஸ்டு தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வில், மொத்தம் பதிவு செய்திருந்த 1.6 லட்சம் பேரில் 96 சதவீதம் போ் பங்கேற்றனா்.

இதற்கான முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் ஜேஇஇ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Tags : exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT