இந்தியா

விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் வரவேற்பு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

3rd Oct 2020 05:34 PM

ADVERTISEMENT

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
 
மத்திய அரசால் ‘வேளாண் உற்பத்தி-வா்த்தகம்-வணிகச் சட்டம்’, ‘விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்’, ‘அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்’ ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் சனிக்கிழமை கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் மட்டுமே போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்த ஜவடேகர் நாடு முழுவதும் எவ்வித எதிர்ப்பும் எழவில்லை என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT