இந்தியா

ராகுல் அரசியலுக்காகவே ஹாத்ரஸ் வருகை: ஸ்மிருதி இரானி 

3rd Oct 2020 06:44 PM

ADVERTISEMENT

ராகுல் காந்தி அரசியலுக்காகவே ஹாத்ரஸ் வருகை தருகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸ் பட்டியலினத்தைச் சோ்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல்காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோா் 150-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டா்களுடன் வியாழக்கிழமை சென்றனா்.

அவா்களின் வாகனங்களை நொய்டா பாரி செளக் பகுதியில் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அதனைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும், வாகனத்தை விட்டு இறங்கி, கிரேட்டா் நொய்டா யமுனை விரைவுச் சாலையில் நடைப்பயணமாக செல்லத் தொடங்கினா். அப்போது, ஏற்பட்ட களேபரத்தில் ராகுல் காந்தியை காவல்துறையினர் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்து தில்லிக்குத் திருப்பி அனுப்பினா். 

உத்தரப் பிரதேச அரசின் இத்தகைய செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராகுல் கைதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்தனர். 

ADVERTISEMENT

இதனிடையே ராகுல் உ.பி., வருகையை மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸின் தந்திரங்களை மக்கள் அறிந்திருந்தால்தான் 2019 தேர்தலில் பாஜக.வுக்கு ஒரு வரலாற்று வெற்றியைத் தந்தனர். ஹாத்ரஸ் ராகுல் வருகை தருவது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக அல்ல, அரசியலுக்காகவே என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT