இந்தியா

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

3rd Oct 2020 02:48 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டு இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாகாண காவல்துறை அலுவலகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்தனர். 

சிறிது நேரத்தில் தற்செயலாக வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

ஷா வாலி கோட் மாவட்டத்தில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு மீது வாகனம் பயணித்ததில், வாகனத்தில் இருந்த  நான்கு தீவிரவாதிகள் பலியாகியுள்ளர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT