இந்தியா

ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் ஹாத்ரஸ் பயணம்

3rd Oct 2020 11:41 AM

ADVERTISEMENT

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் மற்றும் பிரியங்கா இன்று மீண்டும் ஹாத்ராஸ்செல்கிறார்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஹாத்ரஸ் செல்கிறார்கள்.

சனிக்கிழமை பிற்பகலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவினர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, ஹாத்ரஸ் நோக்கி பயணத்தைத் தொடங்க உள்ளனர்.  இந்த குழுவினருடன் பிரியங்கா காந்தியும் உடன் செல்கிறார். 

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர்.

எனினும் அவர்கள் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல்காந்தியின் கார் செல்வதற்கு இடமளிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையையொட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க ஹாத்ரஸ் பகுதி நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.

இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT