இந்தியா

ஹாத்ரஸ் பகுதிக்கு ஊடகங்களை அனுமதிக்க வேண்டும்: சஞ்சய் ரௌத் 

3rd Oct 2020 05:47 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸ் பகுதிக்கு ஊடகங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிவசேனையின் எம்பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சித் தொண்டா்களுடன் வியாழக்கிழமை சென்ற போது, உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, ஏற்பட்ட களேபரத்தில் ராகுல் காந்தியை காவல்துறையினர் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்து தில்லிக்குத் திருப்பி அனுப்பினா். ஹாத்ரஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செய்திகள் சேகரிக்கவும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உத்தரப் பிரதேச அரசின் இத்தகைய செயலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இன்று ஊடகங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவிக்கையில், ஹாத்ரஸ் பகுதியில் ஊடகங்கள் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டன எனத் தெரிவில்லை. அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்றால், உண்மைகளை வெளிக்கொணர ஊடகங்கள் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அங்கு நிலவும் சந்தேகம் விலகும் என்றார். 
 

ADVERTISEMENT

Tags : shiv sena
ADVERTISEMENT
ADVERTISEMENT