இந்தியா

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் இறந்த சிங்கக்குட்டி உடல் கண்டெடுப்பு

3rd Oct 2020 04:25 PM

ADVERTISEMENT

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் இறந்த சிங்கக்குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில்தான் உலகிலேயே ஆசிய சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதன் காரணமாக கிர் வனப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த சரணாலயமாக விளங்குகிறது. இந்த நிலையில் கிர் வனப்பகுதியில் இறந்த சிங்கக்குட்டியின் உடலை வனத்துறையினர் இன்று கண்டெடுத்துள்ளனர். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 6 முதல் 7 மாதங்களேயான பெண் சிங்கக்குட்டியின் உடல் மேற்கு வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்த சிங்கக்குட்டியின் வெளிப்புறத்தில் எந்தவித காயமும் இல்லை. சிங்கக்குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம் என்றார். 

கிர் வனப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : Gujarat
ADVERTISEMENT
ADVERTISEMENT