இந்தியா

இந்தியாவில் கரோனா பாதித்த 9.44 லட்சம் பேருக்கு தீவிர சிகிச்சை 

3rd Oct 2020 10:09 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே சமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 79,476 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,73,545 - ஆக அதிகரித்தது. இதேபோன்று மேலும் 75,628 பேர் குணமடைந்ததால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 54,27,707 - அதிகரித்தது. குணமடைந்தோரின் விகிதம் 83.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,069 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,00,842 - ஆக அதிகரித்தது. உயிரிழந்தோரின் விகிதம் 1.56 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்புக்கு அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 37,480 பேரும், கர்நாடகத்தில் 9119 பேரும், ஆந்திரத்தில் 5,900 பேரும், தில்லியில் 5,438 பேரும், கேளத்தில் 791 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் 9,44,996 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.60 சதவிகிதமாக உள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஐசிஎம்ஆா்) தகவல்படி, இதுவரை 7,78,50,403 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,32,675 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT