இந்தியா

வீட்டிலிருந்து கரோனா சிகிச்சை பெற தொலைதூர மருத்துவம்: ஐஐடி காரக்பூரில் தொடக்கம்

3rd Oct 2020 12:48 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனாவுக்கு எதிராக, உலகம் 6 மாதங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் தடுப்பூசி வராத நிலையில், கரோனா பாதிப்புக்கு சுகாதார ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர். இதனால் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, காரக்பூர் ஐஐடியின் கம்ப்யூட்டர் அறிவியியல் மற்றும் பொறியியல் துறை ஐமெடிக்ஸ் என்ற தொலை தொடர்பு மருந்துவ முறையை உருவாக்கியுள்ளது.

இது வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுபவர்களை, மருத்துவமனையின் சுகாதார சேவையுடன் இணைக்கிறது. தொலை தூரத்திலிருந்தே மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம், நோயாளிகளுக்கு, தங்கள் வீட்டிலேயே சுகாதார சேவை கிடைக்க இந்த ஐமெடிக்ஸ் முறை உதவுகிறது.

இணையதளம் அல்லது செல்போன் மூலம் ஐமெடிக்ஸ் சேவையை பெற முடியும். இதில் நோயாளி தனது இ-மெயில் முகவரி அல்லது செல்போன் எண்-ஐ பதிவு செய்து, தனக்கு தேவையான மருத்துவ துறையை தேர்வு செய்து, தனது பிரச்னைகளை,ஸ்கேன் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

ADVERTISEMENT

அதற்கேற்ப மருத்துவமனை நிர்வாகம், மருத்துவரை அமர்த்தி. மருத்துவரின் ஆலோசனை நேரம், நோயாளிக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலமாக தெரிவிக்கப்படும். அதன் படி நோயாளி, மருத்துவரிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். மருத்துவரின் பரிந்துரைகளையும் நோயாளி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT