இந்தியா

ஹாத்ரஸ் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

3rd Oct 2020 09:01 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பா் 14-ஆம் தேதி தலித் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது, அவா் தனது நாக்கை கடித்ததால் துண்டானது.

பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீடக்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றாா். அதைத்தொடர்ந்து தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : uttarparadesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT