இந்தியா

அடல் சுரங்கப்பாதை: பயணம் மேற்கொண்ட முதல் குழு

3rd Oct 2020 06:24 PM

ADVERTISEMENT

புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையில் முதற்கட்டமாக பொதுமக்களில் ஒரு குழுவினர் பயணம் மேற்கொண்டனர்.

இமாசலில் மிக உயரமான ரோதங் பகுதியில், மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில்  அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

அடல் சுரங்கப்பாதை மூலம் மணாலி - லே இடையிலான பயண தூரம் 40 கிலோ மீட்டர் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக, குதிரை லாடம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள்மற்றும் 1,500 லாரிகள் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே அடல் சுரங்கம் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று பொதுமக்களில் ஒரு குழுவினர் பயணம் மேற்கொண்டனர். பேருந்து மூலம் அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். 

அடல் சுரங்கப்பாதையை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் ராணுவ போக்குவரத்திற்காக மட்டுமின்றி உலக மக்களை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்தளமாகவும் மாற்ற வேண்டும் என்று இமாசல் முதல்வர் தெரிவித்திருந்தார். 

அதன் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்பட்ட அடல் சுரங்கப்பாதையை  பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags : arunachal
ADVERTISEMENT
ADVERTISEMENT