கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7834 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 7834 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 211075 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4474 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 139620 ஆக உள்ளது. தற்போது 80818 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.