இந்தியா

கோவாவில் புதிதாக 513 பேருக்கு கரோனா தொற்று

3rd Oct 2020 12:40 PM

ADVERTISEMENT

 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 513 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 34,455 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 479 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மொத்தம் இதுவரை 29,004 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 84.18 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 237 பேர் வீட்டுத் தனிமைப்படுத்துதலிலும், 84 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 1388 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,58,285 ஆக உள்ளது. மருத்துவமனையில் 5,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT