இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 190 காவலர்களுக்கு கரோனா; பலி எண்ணிக்கை 250ஆக உயர்வு

3rd Oct 2020 04:50 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 190 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிக அளவிலான கரோனா பாதிப்பு மகராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு தினமும் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 190 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23,879ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 2,758 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

20,871 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2 காவலர்கள் கரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியான காவலர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT