இந்தியா

தேயிலை ஏற்றுமதி 18.4 சதவீதம் சரிவு

DIN


கொல்கத்தா: இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டின் ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் 18.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரியம் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாத காலத்தில் இந்தியா 11.52 கோடி கிலோ தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதியானது 14.12 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது.

கரோனா நெருக்கடி காரணமாக நடப்பாண்டில் தேயிலை ஏற்றுமதியானது 18.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

சிஐஎஸ் எனப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 30.14 சதவீதம் சரிவடைந்து நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் 3.14 கோடி கிலோவாக குறைந்துள்ளது.

முக்கிய ஏற்றுமதி நாடான ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 3.67 கோடி கிலோவிலிருந்து 2.09 கோடி கிலோவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், சீனாவுக்கான நமது தேயிலை ஏற்றுமதி 53.9 லட்சம் கிலோவிலிருந்து 56.4 லட்சம் கிலோவாக வளா்ச்சி கண்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி முறையே 32.8 லட்சம் கிலோ மற்றும் 61.1 லட்சம் கிலோவாக குறைந்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதிக்கு கிலோவுக்கு 3.27 டாலா் கிடைத்த நிலையில், நடப்பாண்டில் 2.99 டாலராக குறைந்துபோனது.

இதையடுத்து, மதிப்பின் அடிப்படையிலான தேயிலை ஏற்றுமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் ரூ.3,223.15 கோடியிலிருந்து ரூ.2,559.56 கோடியாக சரிந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT