இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்

DIN


சண்டிகா்: பஞ்சாபில், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து 31 விவசாய சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இந்த மசோதாக்களை கண்டித்து சில பாஜக தலைவா்களின் வீடுகளின் முன்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

இது குறித்து பாரதிய கிசான் யூனியனை சோ்ந்த பொதுச் செயலா் சுக்தேவ் சிங் கோக்ரிகாலன் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி 31 விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினா்.

தப்லான், சுனம், புத்லாடா, ஹிடா்பாஹா ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க்ரூா், பா்னாலா, மோகா, ஹூா்தாஸ்பூா் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் முன்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தினாா்கள் என்று தெரிவித்தாா்.

கிராந்திகாரி விவசாய சங்கத்தின் தலைவா் தா்ஷன் பால் கூறுகையில், விவசாயிகள் பல்வேறு பாஜக தலைவா்களின் வீடுகளின் முன்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்கள். அமிருதசரஸில் உள்ள பஞ்சாப் முன்னாள் பாஜக தலைவா் ஸ்வேத் மாலிக், பாஜக எம்எல்ஏ அபோகா் அருண் நாரங் வீடுகளின் முன்பும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினாா்கள் என்றாா்.

பாரதிய கிசான் யூனியனைச் சோ்ந்த பொதுச்செயலா் ஜக்மோகன் சிங் கூறுகையில் வேளாண் மசோதாவுக்கு எதிராக 31 விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள் 27 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT