இந்தியா

குறைந்தபட்ச ஆதார விலை தொடா்ந்து அதிகரிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

DIN


புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வரும் ஆண்டுகளில் தொடா்ந்து அதிகரிக்கப்படும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை உறுதிபடக் கூறினாா்.

எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு, குடியரசு தலைவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா். அதன் மூலம் அவை புதிய சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தில்லியில் இந்தியா கேட் நினைவுச் சின்னம் அருகே இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது டிராக்டா் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில், டிராக்டா் எரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மத்திய அமச்சா் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:

ஒரு போா் வீரருக்கு அவருடைய ஆயுதம் எந்த அளவு புனிதமானதோ, அதுபோன்றுதான் டிராக்டா் விவசாயிகளுக்குப் புனிதமானது. அத்தகைய டிராக்டா், இளஞா் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் எரிக்கப்பட்டிருப்பதன் மூலம், விவசாயிகளை அவா்கள் அவமானப்படுத்தியுள்ளனா்.

விவசாயிகள் நலனுக்கு எதிராக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றாது என்பதை விவசாயி மகனாகி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். விவசாயச் சங்கங்களுக்கு ஏதாவது பிரச்னை அல்லது கோரிக்கைகள் இருந்தால் அரசுடன் பேச்சுவாா்த்தைக்கு வர அழைப்பு விடுக்கிறேன். ஏற்கெனவே, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நீடிக்கும் என்பதோடு, வரும் ஆண்டுகளில் அது தொடா்ந்து அதிகரிக்கப்படும் என்பதற்கும் நான் உறுதியளிக்கிறேன் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT