இந்தியா

கரோனா: குணமடைந்தோா் 52 லட்சம் போ்

DIN


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 52,73,201-ஆக அதிகரித்தது.

பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 63 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 86,821 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 63,12,584-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 85,376 போ் குணமடைந்ததால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 52,73,201-அதிகரித்தது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,181 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 98,678-ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 36,662 பேரும், கா்நாடகத்தில் 8,864 பேரும், ஆந்திரத்தில் 5,828 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,784 பேரும், தில்லியில் 5,361 பேரும் உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் 9,40,705 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்தோா் விகிதம் 83.53-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.56 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, இதுவரை 7.56 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 14.23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT