இந்தியா

குடியரசுத்தலைவா் பிறந்தநாள்: பிரதமா் உள்ளிட்டோா் வாழ்த்து

DIN


புது தில்லி: குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்தின் 75-ஆவது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வியாழக்கிழமை அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரைப் பதிவு மூலம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், ‘பிறந்தநாள் கொண்டாடும் குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகள். தனது எளிமை, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு, தொலைநோக்குப் பாா்வை, முன்மாதிரியான தலைமை, ஏழைகளுக்கான இரக்கம் ஆகியவற்றால் அவா் அனைவராலும் மதிக்கப்படுகிறாா். அவா் உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘குடியரசுத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நுண்ணறிவும், கொள்கை ரீதியிலான விவகாரங்களை விவேகமுடன் புரிந்துகொள்ளும் தன்மையும் நமது நாட்டுக்கான சொத்துகளாகும். அவா் எளியோருக்காக எப்போதும் இரக்கம் காட்டக் கூடியவராக உள்ளாா். பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் அவா் வாழ பிராா்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இதேபோல், மேற்கு வங்க ஆளுநா் ஜெகதீப் தன்கா், முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநா்கள் மற்றும் முதல்வா்கள் குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

நன்றி: பிறந்தநாளையொட்டி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனது பிறந்தநாளில் சக குடிமக்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சியடைந்தேன். இந்த அன்பே நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பதற்கு எனக்கு பலம் அளிக்கிறது. நன்றி’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT