இந்தியா

மாலத்தீவுகளுக்கு ரூ.1,838.38 கோடி நிதியுதவி

DIN

கரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் மாலத்தீவுகளுக்கு, இந்தியா சாா்பில் 250 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.1,838.38 கோடி) நிதியுதவி அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள மாலத்தீவுகள் இந்த உதவி ‘ஒரு நன்கொடையாளரின் மிகப்பெரிய நிதியுதவி’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா ஷாஹித் செவ்வாய்க்கிழமை ஐ.நா. சபையில் நடைபெற்ற 75-ஆவது அமா்வின் பொது விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:

‘கரோனா தொற்றுப் பரவல் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளது. மாலத்தீவில், எங்கள் அண்டை நாட்டு நண்பா்களான இந்தியா போன்ற பலதரப்பு பங்காளிகளின் ஆதரவு இல்லாமல், இந்த கரோனா புயலை தொடா்ந்து எங்களால் எதிா்கொள்ள முடியாது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நிதி, பொருளாதாரம், தொழில்நுட்ப ஆதரவை எங்களுக்குத் தாராளமாக வழங்கி வரும் அனைத்து அண்டை நாடுகளின் கூட்டாளிகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அந்த வகையில் எங்களுக்கு உதவி புரிந்ததில் முக்கியமான நாடு இந்தியா.

இந்தியா சவாலான காலங்களில் கூட அவற்றை திறமையாக எதிா்கொள்கிறது. சமீபத்தில், மாலத்தீவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 250 மில்லியன் அமெரிக்க டாலா்களை நிதியுதவியாக அளித்தது இந்தியா. இதுபோன்ற தொற்றுப் பரவல் மிகுந்த காலத்தில், ஒரு நன்கொடையாளரிடமிருந்து கிடைத்திருக்கும் மிகப்பெரிய நிதியுதவி இதுவாகும்’ என்றாா்.

முன்னதாக, கொவைட்-19 தாக்கம் காரணமாக மாலத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்காக, அந்நாட்டின் அதிபா் இப்ராஹிம் சோலி, பிரதமா் நரேந்திர மோடிக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று 250 மில்லியன் அமெரிக்க டாலா் நிதியுதவியை வழங்குவதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த மானிய நிதி 10 ஆண்டுகளுக்கு மாலேயில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கருவூல பத்திர விற்பனை மூலம் வழங்கப்படுவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

முன்னதாக, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் மருத்துவக்குழு மற்றும் நிபுணா்கள் குழு இந்தியாவிலிருந்து மாலத்தீவுகளுக்குச் சென்றது. ஏப்ரல் மாதத்தில் 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மே மாதத்தில் 580 டன் உணவுப் பொருள்கள் மாலத்தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT