இந்தியா

எந்தெந்த மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து? விவரங்கள் இதோ...

1st Oct 2020 09:28 PM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்.2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், திருநெல்வேலி, மதுரை திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT