இந்தியா

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

DIN


புது தில்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க
உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுகளை அக்டோபர் 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவதற்கு யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. முற்பகலிலும் பிற்பகலிலும் தலா 2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வை, நாடு முழுவதிலும் உள்ள 72 தேர்வு மையங்கள் மூலம் 6 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளனர்.
கரோனா தொற்று பரவல், பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய யுபிஎஸ்சி, தேர்வை ஒத்தி வைப்பதால் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தேர்வை நடத்தும் சுழற்சி முறை பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவித்திருந்தது. மேலும், தொற்று பரவலைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தேர்வை ஒத்திவைக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் யுபிஎஸ்சியின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரே ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்று புதன்கிழமை அறிவித்தனர். 
இந்தத் தேர்வை 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுடன் சேர்த்து நடத்துவது என்பது அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தேர்வு நடத்துவதை பாதிக்கும் என்று கூறிய நீதிபதிகள், அண்மைக் காலங்களில் தேசிய அளவிலான சில தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT