இந்தியா

உ.பி.யில் நுழைய அனுமதி மறுப்பு; ஹாத்ராஸ் நோக்கி ராகுல் நடைப்பயணம்

DIN

உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹாத்ராஸ் பகுதி நோக்கி இருவரும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க  காங்கிரஸ்  மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர்.

எனினும் அவர்கள் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல்காந்தியின் கார் செல்வதற்கு இடமளிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையையொட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க ஹாத்ராஸ் பகுதி நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT