இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பிரசாந்த் பூஷண்

PTI

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஒரு ரூபாய் அபராதம் விதித்த தண்டனையை  மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை நீதிமன்ற பதிவாளரிடம் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் செலுத்தியிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது  மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, அபராதம் விதித்ததை மறு ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவையும், நீதித்துறையையும் விமா்சித்து வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகளை வெளியிட்டாா். அதுதொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் அவரை குற்றவாளி என கடந்த மாதம் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தது. அதைக் செவ்வாய்க்கிழமைக்குள் (செப்.15) கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை பிரசாந்த் பூஷண் செப்டம்பர் 14-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செலுத்தினாா்.

அதன் பின்னா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு எதிராக வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘ஒருவரை குற்றவாளி என தீா்ப்புக் கூறுவதும், அவருக்கு தண்டனை வழங்குவதும் குற்றவியல் சட்டப்படி தீா்ப்பு வழங்கும் நடைமுறையின் வெவ்வேறு கட்டங்களாகும். இதில் முதலில் சம்பந்தப்பட்ட நபா் குற்றவாளியா? இல்லையா என்பது தொடா்பாக விசாரிக்கும் உச்சநீதிமன்றம், அவா் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து தனியாக விசாரணை நடத்துகிறது.

இதேபோல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீா்ப்பையும், தண்டனை விவரம் தொடா்பான தீா்ப்பையும் மறுஆய்வு செய்யக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கும் உரிமையுள்ளது. இந்த உரிமையை அரசமைப்பின் எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை.

எனவே நான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் தகுதி குறித்தும், அதனை விசாரணைக்கு ஏற்பது தொடா்பாகவும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் செலுத்துமாறு விதித்த தண்டனையை எதிர்த்து இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT