இந்தியா

நாட்டில் புதிதாக 86,821 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது

1st Oct 2020 10:56 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  86,821 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,181-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால். தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,40,705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கரோனா தொற்றிலிருந்து 52,73,201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,181 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  98,678-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 83.53 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இறப்போர் விகிதம் 1.56 சதவிகிதமாக குறைந்துள்ளது.


நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகிறது. மகாராஷ்டிரத்தில் 13,84,446 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 36,662 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT