இந்தியா

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி

1st Oct 2020 03:46 AM

ADVERTISEMENT

 


மும்பை: "கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த மார்ச் மாதத்தில் இருந்த கடன் தொகையைவிட ரூ.28,686 கோடி குறைவாகும்' என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 
இதுதொடர்பாக அந்த வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: 
கடந்த மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவின் வெளிநாட்டுக் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 20.6 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் இறுதியில் 21.8 சதவீதமாக அதிகரித்தது.  இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் வணிகக் கடன்களே அதிகம். வெளிநாட்டுக் கடனில் வணிகக் கடன்களின் பங்கு மட்டும் 38.1 சதவீதம். 
கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, மொத்த வெளிநாட்டுக் கடனில் நீண்ட கால கடன் ரூ.33.06 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மார்ச் மாதம் இருந்த நீண்ட கால கடனுடன் ஒப்பிடுகையில் ரூ.14,711 கோடி குறைவாகும். 
மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகிய கால கடனின் அளவு கடந்த மார்ச் இறுதியில் 19.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி சற்று குறைந்து 18.9 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT